ஏனாம் தொகுதியில் பதற்றம் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல்: மாயமானவர் ஆற்றுப்பகுதியில் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் தலைவர் ரங்கசாமி, அமமுக ரமேஷ்பாபு உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளரான துர்கா பிரசாத் பொம்மடி கடந்த 1ம்தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதுகுறித்து அவரது மனைவி பொம்மடி சாந்தி, ஏனாம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கோதாவரி ஆற்றுப் பகுதியில் காயங்களுடன் கிடந்த துர்கா பிரசாத் பொம்மடி நேற்று மீட்கப்பட்டார். பின்னர் அவர் காக்கிநாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அரசியல் பிரமுகர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Related Stories:

>