கோவை முன்னாள் மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோவை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார். இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். கோவை வடக்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கணபதி 3ம் நம்பர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ராஜ்குமார் வீட்டில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டிலேயே டிராவல்ஸ் பஸ் ஏஜன்சியும் உள்ளது. இங்கேயும் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories:

>