வேலூரில் தீவிர சோதனை வேன்களில் ரூ.3.67 கோடி பறிமுதல்

வேலூர்: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி  பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நேற்று காலை வேலூரில் இருந்து வந்த ஒரு வேனை குழுவினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வேலூரில் உள்ள வங்கியில் இருந்து மற்றொரு கிளைக்கு ரூ.1.56கோடி எடுத்து சென்றதும், உரிய அனுமதி பெறாததும் தெரிய வந்தது. இதையடுத்து நிலைகண்காணிப்பு குழுவினர் வேனுடன் பணத்தை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகே ஒரு வேனில் வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.65 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேலூர் டோல்கேட் அருகே அனுமதி பெறாமல் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.1.07 கோடியும், மற்றொரு வாகனத்தில் இருந்து ரூ.39 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>