×

சீன தயாரிப்புகளால் படுநஷ்டம் செல்போன் உற்பத்தியை நிறுத்துகிறது எல்ஜி நிறுவனம்

சியோல்: எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் முன்னணியில் இருக்கும் எல்ஜி நிறுவனமானது செல்போன் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் செல்போன் தயாரிப்பில் உலகளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. சமீபகாலமாக செல்போன் சந்தையில் கடும்போட்டி நிலவுவதாலும், சீனத்தயாரிப்புகள் ஆதிக்கம் செலுத்துவதாலும் போட்டியிட முடியாமல் எல்ஜி சற்று பின் தங்கியது. கடந்த 2020ம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையிலும் எல்ஜியின் லாப விகிதம் குறைந்ததும், விற்பனை மந்தமானதும் தெரிய வந்தது.

இதனால் தனது வியாபார யுக்தியை மாற்றும்பொருட்டு, வரும் ஜூலை 2021 முதல் செல்போன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்த முடிவு செய்வதாக அறிவித்துள்ளது. ‘வளர்ச்சியடை ந்து வரும் எலக்ட்ரிக் கார்களின் உதிரி பாகங்கள், ரோபோட்டிக் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஈடுபட எல்ஜி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட செல்போன்களுக்கான சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது’ என செய்திக்குறிப்பில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : LG , LG suspends production of Chinese mobile phone
× RELATED காற்று இல்லாவிட்டாலும் தேசிய கொடி...