மயாமி ஓபன் டென்னிஸ் ஹூபர்ட் சாம்பியன்

மயாமி: அமெரிக்காவில் நடைபெற்ற மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னருடன் (19 வயது, இத்தாலி) மோதிய ஹூபர்ட் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 45 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏடிபி  மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் ஹூபர்ட் (24 வயது) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், இந்த பெருமையைப் பெறும் முதல் போலந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>