×

வந்தாச்சி ஐபிஎல்...

* கொரோனா பீதி காரணமாக இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என்பது உறுதியாகி விட்டது. கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில்... ‘மும்பையில் மட்டுமின்றி எல்லா நகரங்களிலும் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும்’ என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
* இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஜடேஜாவை கிண்டல் செய்தது, சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டது என சர்ச்சையில் சிக்கியதால் கடந்த ஆண்டு மார்ச்சில் நீக்கப்பட்ட மஞ்ரேக்கருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
* கேகேஆர் அணி தங்களுக்குள் 2 அணிகளாக பிரிந்து விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் கில் தலைமையிலான அணி 175 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் அதிரடியாக 90 ரன் விளாசினார். பென் கட்டிங் தலைமையிலான அணி சேசிங் செய்த போது 18.5 ஓவரில் இலக்கை எட்டி வென்றது.
* ஐபிஎல் 2020 சீசனில் இந்திய வீரரை பயிற்சியாளராகக் கொண்ட ஒரே அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருந்தது. கும்ப்ளே பயிற்சியின் கீழ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும், முதல் பாதியில் ஒரு வெற்றியும், 2வது பாதியில் 5 வெற்றியும் பெற்றது. நடப்பு சீசனுக்கு பஞ்சாப் கிங்ஸ் என்று பெயரை மாற்றிய நிர்வாகம் பயிற்சியாளரை மாற்றவில்லை.
* சிஎஸ்கே புது வரவு மொயீன் அலி (இங்கிலாந்து). அணிக்கான சீருடையில் மதுபான நிறுவனத்தின் லோகோ இருப்பதால் அதை அணிய மொயீன் தயங்கியுள்ளார். ‘அது தனது மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதுதான் காரணம்’ என்ற அவரது கருத்தை ஏற்ற அணி நிர்வாகம், குறிப்பிட்ட லோகோ இல்லாமல் விளையாட அனுமதித்துள்ளது.
* பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அன்ரிச் நோர்ட்ஜ், காகிசோ ரபாடா இருவரும் நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டனர். நேராக மும்பை செல்லும் அவர்கள் கொரோனா சோதனை, தனிமைப்படுத்தலுக்கு பிறகு அணியுடன் இணைய உள்ளனர்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனுக்கு புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.  நீலம் பாதி, இளச்சிவப்பு மீதி என்று மாறியிருக்கிறார்கள். ராஜஸ்தானில் நிலத்தடி நீர் பாதுகாக்க 14 ஆயிரம் மரங்கள் நடுதல், மனவளர்ச்சி என பல்வேறு விழிப்புணர்வுகளுடன் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Tags : IPL , Vandachchi IPL ...
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி