சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உயிர்ப்பலி வாங்கும் சாலை பள்ளம்: பீதியில் வாகன ஓட்டிகள் பயணம்

ஊத்துக்கோட்டை: சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் மற்றும் பல்வேறு வாகனங்கள் இந்த சாலையை அதிகளவு பயன்படுத்துகின்றன. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை மற்றும் திருப்பதிக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சாலையை அகலப்படுத்தவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியில் மேம்பால பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் கற்கள் நிரப்பி சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கிவிடுகிறது. எனவே, உடனடியாக சாலை அமைக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>