மஞ்சி மில்லில் பயங்கர தீ

கிணத்துக்கடவு: கோவை கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையம் பிரிவிலிருந்து சென்றாம்பாளையம் செல்லும் சாலையில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான மஞ்சி மில் இயங்கி வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்டோர் வேலை

பார்த்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மஞ்சிமில்லுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் மஞ்சி மில்லில் இருந்து பயங்கர புகை வருவதை பார்த்த, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ மளமளவென கொட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சி முழுவதும் பரவியது.

விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதற்குள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்கள், நவீன இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாயின. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களின் உதவியோடு தீயை கட்டுக்குள் கொண்டு கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: