×

அசாம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம்: அம்மாநில அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கவுகாத்தி: அசாம் மக்கள் முகக்கவசம் அணிய ேவண்டாம் என்று அம்மாநில அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் நாளை மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அசாமில் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அம்மாநில பாஜகவை சேர்ந்த சுகாதாராதுறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால், மக்கள் யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. அசாமில் பிஹு பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை.

அசாமில் கொரோனா போய்விட்டது. ஒருவேளை கொரோனா தாக்கம் இங்கு மீண்டு அதிகரித்தால். மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய நான் வலியுறுத்துவேன். அப்போது அவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்’ என்றார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி வரும் நிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Assam , Do not wear ‘mask’: Assam Minister Controversial Speech
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்