×

கோயம்பேட்டில் நில ஒதுக்கீடு முறைகேடு: அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு: பல கோடி லஞ்சம்: முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கைக் கோரி ஆளுநருக்கு திமுக கடிதம்

சென்னை: நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதியளிக்க கோரி ஆளுநருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருக்கக்கூடிய 10.5 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு சதுரடி 12,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அரசு நிலத்தை முறையாக ஏலத்துக்கு விடாமல், அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றி விற்காமல் ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு சாதகமாக இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதும் நடவடிக்கை கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது ஏலத்துக்கு விடாமல் பதவியை துஷ்பிரயோகம் செய்து கிட்டத்தட்ட ரூ.500 கோடி மதிப்பிலான நிலம் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு நிலத்தை அரசுக்கு சம்மந்தமான பொதுவியல் திட்டத்திற்கு பயன்படுத்துவதே வழக்கம். ஆனால் அரசு விதிகளை மீறி நிலம் விற்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய முறைகேடாகும்.

குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்ததால் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் சந்தை விலை ஒரு சதுர அடி ரூ.25,000- விற்கப்படும் நிலையில் தனியார் நிறுவனத்துக்கு ரூ.12,000-க்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சந்தை விற்பனையில் பாதிக்கு பாதி விலைக்கு விற்கப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்குவதற்கு வெளிப்படையாக ஏலம் கோராமல் ரகசியமாக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Coimbatte ,Government ,Governor ,CM , Coimbatore, Land Abuse, Chief Minister, Criminal, DMK, Letter
× RELATED ஒரே வாகனத்தில்...