×

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?.. முதல் வாக்காளர்கள் கவனத்திற்கு...

சென்னை: தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, ேதர்ல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* வாக்கு அளிக்க வீட்டில் இருந்து செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.
* வாக்காளர் அடையாள அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
* வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளியில், மற்ற வாக்காளர்களுடன் வரிசையில் நிற்கும்போது 6 அடி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* ஒருவரை மட்டுமே வாக்குச்சாவடி மையத்துக்குள் போலீசார் அனுப்பி வைப்பார்கள். அவர் ஓட்டு போட்டு முடிந்து வெளியே வந்த பிறகுதான் அடுத்தவர் ஓட்டு போட உள்ளே செல்ல முடியும்.
* வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றதும், கையை சானிடைசர் போட்டு துடைத்துக்கொள்ள வேண்டும்.
* அடுத்து, வாக்காளர்களுக்கு டெம்ரச்சர் (உடல் வெப்பநிலை) பரிசோதனை செய்யப்படும்.

* வலது கைக்கு மட்டும் கிளவுஸ் போட வேண்டும். இது இலவசமாக வாக்குச்சாவடி மையத்திலே கிளவுஸ் தரப்படும்.
* வாக்குச்சாவடி மையத்திற்குள் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள்.
* முதல் அதிகாரி, நம்முடைய மாஸ்கை கழட்ட சொல்லி, அடையாள அட்டையை உறுதிபடுத்துவார். ஐடி புரூப் வைத்து வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சோதனை செய்து, டிக் செய்து கொள்வார்.

* அடுத்து 2வது அதிகாரியிடம் சென்று, அவரிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும். அவர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து ஓட்டுப்போட அனுப்பி வைப்பார்.
* 3வது அதிகாரி உங்களிடம் உள்ள வாக்காளர் சிலிப்பை வாங்கி பார்த்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். சரியாக இருந்தால், உங்களை ஓட்டுபோட அனுப்பி வைப்பார்.
* நீங்கள், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்கு சென்று உங்களுக்கு பிடித்த சின்னத்தில் உள்ள பட்டனை அமுக்கி வாக்களிக்க வேண்டும்.

* வாக்களித்து விட்டு வெளியே வரும்போது கையுறையை கழட்டி, அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, சானிடைசர் மூலம் கைகளை கழுவிவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே செல்ல வேண்டும்.
* கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர் வாக்களிக்க வரும்போது கண்டிப்பாக பிபிகிட் உடை அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 3 அதிகாரிகளும் பாதுகாப்பு உடை அணிந்திருப்பார்கள். கொரோனா நோயாளிகள், கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது ஏப்ரல் 6ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
* வாக்களிப்பது அனைவரின் கடமையாகும்.

* தற்போது அதிகளவு வெயில் இருப்பதால், காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு சென்றால் வசதியாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். ஆனால், வாக்களிக்காமல் மட்டும் இருக்க வேண்டாம்.
* வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான்கார்ட், வங்கி புத்தகம் உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

Tags : How to vote in the election? .. First voters' attention ...
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.