×

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் தொடருக்கு சிக்கல்?

மும்பை: 14வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள்தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி வீரர் அக்‌ஷர்பட்டேல், சென்னை அணி நிர்வாகி, மும்பை வாங்கடே ஸ்டேடிய ஊழியர்கள் 8பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவின் நிதிஷ்ரானா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக அணியை விட்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார்.

மருத்துவகுழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். இதனால் அவர் மும்பைக்கு எதிராக முதல் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வீரர்களும் அடுத்தடுத்து பாதிப்பால் ஐபிஎல் தொடர் முழுமையாக நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அங்குநடைபெற உள்ள போட்டிகள் ஐதராபாத்திற்கு மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் மைதானங்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags : Corona ,IPL , Corona for successive players: Problem for IPL series?
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...