மொயின் அலி கோரிக்கை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியில் மதுபான நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த அணியில் இடம்பெற்றிருந்த மொயின் அலி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மொயின் அலி இஸ்லாமியர் என்பதால் மது தொடர்பான எந்த விளம்பரமும் தன்னுடைய ஜெர்சியில் இடம் பெற வேண்டாம் என்றும் அப்படி இடம்பெற்றுள்ள மதுபான விளம்பர சின்னத்தை நீக்கிவிடும்படியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஒப்புக்கொண்டு மொயின் அலியின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெர்சியில் இருந்து அந்த மதுபான விளம்பர சின்னத்தை நீக்கவும் சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

Related Stories:

More
>