மியாமி ஓபன் டென்னிஸ்: போலந்தின் ஹியூபெர்ட் சாம்பியன்

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையரில் இறுதி போட்டி நேற்று இரவு நடந்தது. தரவரிசையில் 21வது நிலை வீரரான 19 வயது இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர், 26வது நிலை வீரர் போலந்தின் 24 வயதான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட் டைப்ரேக்கர் வரை சென்றது. இந்த செட்டை 7(7)-6(4) என்ற செட் கணக்கில் ஹியூபெர்ட் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

அவருக்கு ரூ.2.19 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. சின்னெருக்கு ரூ.1.25 கோடி கிடைத்தது. மகளிர் ஒற்றையரில் இன்று காலை நடந்த பைனலில், ஜப்பானின் எனா ஷிபஹாரா, ஷுகோ அயோமா ஜோடி, 6-2, 7-5 என்ற செட் கணக்கில், பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி, அமெரிக்காவின் ஹேலி கார்ட்டர் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

Related Stories: