×

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்

இந்தூர்: உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை இடம்பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு. இவரது இளைய மகள் சந்திரா நாயுடு (வயது 88), இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த இவர் சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று (ஞாயிறு) மதியம் காலமானார். இந்த தகவலை சந்திராநாயுடுவின் சகோதரியின் மகன் விஜய் நாயுடு உறுதி செய்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சந்திரா நாயுடு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போதெல்லாம் பெண்கள் சல்வார் கமீஸ் அணிந்தபடி கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

மேலும் இந்து அரசு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகவும் சந்திரா பணியாற்றியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட அளவுகடந்த ஆர்வத்தால் பின்னாளில் சர்வதேச போட்டிக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளரானார். கடந்த சில ஆண்டுகளாக பி.சி.சி.ஐ., சி.சி.ஐ. மற்றும் மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் சார்பில் நடந்த பல்வேறு விழாக்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். சந்திரா மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் ஜக்டேல் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Tags : India , India's first female cricket commentator dies
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!