×

தமிழக ஆளுநர் கடிதத்தின் நகல் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழக ஆளுநர் கடிதத்தின் நகல் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் பரோல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும் வரை முடிவெடுக்க முடியாது என ஆளுநர் கடிதம் அனுப்பினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் அனுப்பிய கடிதத்தின் நகல் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார். தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்குடன் அற்புதம்மாள் மனுவை சேர்த்து விசாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். அதேவேளையில் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நீதிமன்றங்களில் இவ்வாறு இருவேறு மாறுபட்ட கருத்தை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்ற ஆளுநர் கடிதத்தின் நகலை தங்களுக்கு தர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Awesome ,Governor of Tamil , perarivalan, arputhammal
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...