×

வரத்து குறைவு, விற்பனை மந்தம் வத்தல், பருப்பு வகை, பாமாயில் விலை சரிவு-விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

விருதுநகர் :  விற்பனை மந்தம், வரத்து குறைவு எதிரொலியால் பாமாயில் டின்னுக்கு ரூ.80, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.50, நிலக்கடலைப்பருப்பு மூட்டைக்கு ரூ.750, வத்தல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம், உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.500 குறைந்துள்ளது.பாமாயில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை உயர்ந்த நிலையில், நடப்பு வாரத்தில் 15 கிலோ டின்னுக்கு ரூ.80 விலை சரிந்துள்ளது. பாமாயில் ரூ.1,940 (2,020), நிலக்கடலைப்பருப்பு (80 கி) மூட்டைக்கு ரூ.750 சரிவால் ரூ.7,250 (8,000), நிலக்கடலை விலை சரிவால் கடலை எண்ணெய் டின் ரூ.2,800 (2,850), கடலைபுண்ணாக்கு 100கிலோ ரூ.4,000 (4,200).

தென்மாவட்டங்களில் விளைச்சலாகும் முண்டு வத்தல் செடி ஜனவரி மாதம் பெய்த மழையால் அழுகியது. வரத்து குறைவு காரணமாக முண்டு வத்தல் கடந்த மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் என அதிரடியாக விலை உயர்ந்தது. இந்த உயர்வால் ஏற்பட்ட விற்பனை மந்தத்தை தொடர்ந்து முண்டு வத்தல் கடந்த இருவாரங்களாக விலை குறைந்து வருகிறது.

(அடைப்பிற்குள் கடந்த வார விலை) குவிண்டால் ரூ.22,000 முதல் ரூ.28,000( ரூ.25,000 முதல் ரூ.32,000), முண்டு வத்தல் பழசு ரூ.18,500 முதல் ரூ.21,500 (19,500 முதல் 22,500), லோக்கல் சம்பா வத்தல் வத்தல் ரூ.12,500 முதல் ரூ.14,350 (13,000 முதல் 14,500), குண்டூர் வத்தல் புதுசு ரூ.13,000 முதல் ரூ.14,000 (15,000 முதல் 16,000).

பர்மா, தஞ்சை பகுதிகளில் இருந்து உளுந்து வரத்து அதிகம் இருப்பதால் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.500 வரை விலை குறைந்துள்ளது. உளுந்து (100 கிலோ) லயன் ரூ.8,000(8,900), பர்மா உளுந்து பருவட்டு(புதுசு) ரூ.8,000(8,700), பர்மா பொடி ரூ.7,800(8,100), உருட்டு உளுந்தம் பருப்பு லயன் ரூ.10,500 (10,900), உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா பருவட்டு ரூ.10,500(10,700), உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி ரூ.10,200(10,400), தொளி உளுந்தம்பருப்பு ரூ.9,300 (9,500).

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்:  உக்ரைன் துவரை (100 கிலோ) ரூ.6,000, தான்சானிய துவரை ரூ.6,800, லயன் துவரை ரூ.7,200, துவரம் பருப்பு இறக்குமதி ரூ.8,700, துவரம் பருப்பு ரூ.9,700, உடைப்பு துவரம் பருப்பு ரூ.9,200.கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா பாசிப்பயறு (புதுசு) ரூ.9,200, இறக்குமதி பயறு ரூ.8,900, ஆந்திரா பயறு ரூ.8,700, பாசிப்பருப்பு லயன் ரூ.10,900, பாசிப்பருப்பு ஆந்திரா ரூ.11,100, இறக்குமதி பாசிப் பருப்பு ரூ.11,400.கடலைப் பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.8,000, பொரிகடலை 55 கிலோ மூட்டை ரூ.4,400. பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.6,300. பட்டாணி வெள்ளை ரூ.6,600, மசூர் பருப்பு உருட்டு ரூ.7,500.

நல்லெண்ணெய் டின் ரூ.3,713 எள் புண்ணாக்கு (50 கி) ரூ.2,000, நாடு மல்லி(40 கிலோ)ரூ.5,000, லயன் மல்லி  ரூ.3,300. மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள் ரூ.140, வெந்தயம் ரூ.90, கடுகு ரூ.80, சீரகம் ரூ.220, சோம்பு ரூ.140, மிளகு ரூ.420, புளி கிலோ ரூ.100, கசகசா ரூ.1,200, கருப்பு எள் ரூ.200, வெள்ளை பூண்டு ரூ.160, மண்ட வெல்லம் ரூ.55, சுண்டல்(கருப்பு) ரூ.58, வெள்ளை ரூ.75, தட்டாம் பயறு ரூ.60, கருப்பட்டி ரூ.240 என விற்பனையானது.

Tags : Virudhunagar , Virudhunagar: Rs 80 per tin of palm oil, Rs 50 per tin of peanut oil and groundnut due to sluggish sales and low supply.
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...