×

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி கைது

சேலம்: சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மாதேஸ்வரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மாதேஸ்வரன் வீட்டில் இருந்து 100 மதுபாட்டில்களையும் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது காரணமாக தான் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து ஆங்காங்கே வாகன சோதனைகளை நடத்தி வருகிறது.

குறிப்பாக பல இடங்களில் வாகன சோதனை நடத்தும் போது கார்களில் லட்சக்கணக்கில் பணத்தை கொண்டு வருவதும், அதை தேர்தல் அதிகாரிகள் பிடிப்பதும் தொடர்ந்து நடைபெறக்கூடிய நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் அதிமுகவினரை பொறுத்தவரை வாக்காளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை பணப்பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கடாச்சலம் என்பவர் வாக்காளர்களுக்கு அதாவது குடிசைவாழ் மக்களுக்கு 2,000 ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு 1000 ரூபாயும் பட்டுவாடா செய்வதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியானது. இந்த நிலையில் அதிமுகவினரின் பணப்பட்டுவாடா குறித்து திமுகவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதேபோல தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Tags : Salem Northern Assembly , AIADMK, arrested
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்