×

தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளைச் மோடி சொல்லியதை மக்கள் மறக்கவில்லை : ப சிதம்பரம்

சென்னை : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 2வது தீவிரமாக வீசி வருகிறது. தினசரி பாதிப்பில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. நேற்று மட்டும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது. கொரோனா தொற்று பரவலை 21 நாட்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை. தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை.

தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது. தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது, என தெரிவித்துள்ளார்.


Tags : Modi , Modi, P. Chidambaram
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...