ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரையில் மர்ம துப்பாக்கி குண்டுகளால் பரபரப்பு. கியூ பிரிவு போலீசார் விசாரணை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேவாலயம் அருகே கடற்கரையில் மர்மமான முறையில் பிளாஸ்டிக்  டப்பா கிடந்துள்ளது. இதனை எடுத்த மீனவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது உள்ளே துப்பாக்கி குண்டுகள் இருந்தன. உடனே கியூ பிரிவு போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். டப்பாவில் இருந்த 7 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>