அமெரிக்கா, பிரேசிலில் ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.61 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.18 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.61 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.28 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,800-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 36249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 31,419,597 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 558795 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 477 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 12,587,920 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 165,132 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 31359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 12,984,956 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 331,530 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா ரஷ்யா பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1233 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,580,894 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 100,374 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் .

Related Stories:

>