கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை: அசன் மவுலானா பிரசாரம்

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத்கந்த் சகாய் நேற்று மாலை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 182வது வார்டுக்குட்பட்ட திருவான்மியூர் காந்தி தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அசன் மவுலானா பேசுகையில், ‘வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட மீனவ குப்பங்களில் வாழ்வாதாரம் உயர அவர்களுக்கு மீன்பிடி படகு, குழாம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். பிடித்த மீன்களை விற்பனை செய்ய விற்பனை கூடம் அமைத்து தருவேன்.

வேளச்சேரி தொகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டு போதிய வசதிகள் ஏற்படுத்தி 24 மணி நேர சேவை வழங்கப்படும். தொகுதி மக்களின் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்,’  என்றார். பிரசாரத்தில், திமுக பகுதி செயலாளர் துரை கபிலன், காங்கிரஸ்  மாவட்ட தலைவர் அடையாறு துரை, மதிமுக மாவட்ட செயலாளர் கழகக் குமார், 182வது வார்டு பொறுப்பாளர் பி.விக்னேஷ், வட்ட செயலாளர் கணேஷ்குமார், திமுக நிர்வாகிகள் நித்தியகுமார், கிருஷ்ணன், விக்னேஷ், பிசி. அறிவழகன், வட்ட செயலாளர் தமிழரசு மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.

Related Stories:

>