மாதவரம் வி.மூர்த்திக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி நேற்று கதிர்வேடு, புழல் செங்குன்றம் போன்ற பகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாமல் உதவித்தொகை, 3 மாதத்தில் பட்டா, தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, மற்றும் குடிநீர், சாலை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் கண்டிப்பாக செய்து தருவேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள விலையில்லா 6 காஸ் சிலிண்டர், வாஷிங் மிசின், வீடு தேடி ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதனிடையே மாதவரம் வி.மூர்த்திக்கு ஆதரவாக தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வீதி வீதியாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். புழல் பகுதி 23வது மேற்கு வட்ட அதிமுக செயலாளர் புழல் எஸ்.விஜயன் தலைமையில் நிர்வாகிகள் வி.பரமேஸ்வரன், கே.அமுதா, எம்.ஏ.அருள்மணி, எம்.கமலா, எல்.மில்கிஸ், எம்.சி.சேகர் இ.செல்வம், இ.மலர்விழி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  ஆகியோர் புனித அந்தோணியார் தெரு, திருப்பூர் குமரன் தெரு, திருவள்ளுவர் தெரு, புழல் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

More
>