மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள தெருக்கள், பல்லக்குமா நகர், கபாலி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதிக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும். மயிலாப்பூரில் சிறந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். திமுக அறிவித்துள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்துவேன்.

அடிப்படை தேவைகள் உடனே நிறைவேற்றப்படும், மக்கள் இணைய வழியாக புகார் அளிக்க வழிமுறைகள் செய்யப்படும். எந்நேரமும் எம்எல்ஏ அலுவலகம் உங்களுக்காக செயல்படும். உங்களில் ஒருவனாக இருந்து, மக்களுக்கு சேவை புரிய நல்வாய்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். அப்போது பொதுமக்கள் எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு தான், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று வாக்குறுதி அளித்தனர். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: