×

கலாசகொட்டு இன்றி கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இங்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர். கேரளாவில் எந்த தேர்தலாக இருந்தாலும் பிரசாரம் முடியும் தினத்தன்று மாலையில் ஒவ்வொரு முக்கிய சந்திப்பிலும் அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில் திரண்டு பிரசாரத்தை முடிப்பார்கள். இதை கலாசகொட்டு என அழைக்கின்றனர். அனைத்துக் கட்சி தொண்டர்களும் திரண்டு மேள தாளம் முழங்க, ஆடல் பாடலுடன் பிரசாரத்தை முடிப்பார்கள். அனைத்துக் கட்சி தொண்டர்களும் ஒரே இடத்தில் குவிந்தாலும், புதிதாக பிரச்னை ஏதுவும் ஏற்படாது என்பது தான் இதன் சிறப்பு அம்சமாகும். ஆனால், இம்முறை கொரோனா பரவல் காரணமாக கலாசகொட்டு நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால் நேற்று கேரளாவில் எல்லா இடத்திலும் வழக்கமான ஆரவாரம் இன்றி பிரசாரம் ஓய்ந்தது.


Tags : Kerala , கலாசகொட்டு இன்றி கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...