×

இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வர் பேச்சு இடைப்பாடிக்கு என்னால் பெருமை

இடைப்பாடி: என்னால் இடைப்பாடி தொகுதிக்கே பெருமை என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இறுதிக் கட்ட பிரசாரத்தை தான் போட்டியிடும் இடைப்பாடி தொகுதியில் மேற்கொண்டார். இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது: 234 தொகுதியையும் விட எடப்பாடி தொகுதி தனிப்பெருமை வாய்ந்தது. இத்தொகுதியில் மாதம் ஒரு முறை, 2 முறை என அடிக்கடி வந்து நடந்து சென்று பொதுமக்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதிமுகவின் கோட்டையான இடைப்பாடி தொகுதியை  யாராலும் அசைக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் ராமநாதபுரம், சிதம்பரம், கன்னியாகுமாரி என சூறவாளி பிரசாரம் செய்தேன்.  என் பெயரை சொல்லாமல் மக்கள் எடப்பாடி என்றுதான் கூறுகின்றனர். என்னால் இடைப்பாடி தொகுதிக்கு பெருமை, எடப்பாடி என்று சொன்னால் இங்கு இருக்கும் அத்தனை வாக்காளர்களையும் குறிக்கும். அதிமுக கூட்டணி பலம் மிக்க கூட்டணி.  வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் வீடு தேடி வரும். கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹7ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். எனவே இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாடே வியக்கும் வகையில் வாக்களித்து மற்ற 233 தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.



Tags : Principal ,Intermediate , Chief's speech I am proud of the intervention
× RELATED கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்