அதிகமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கண்டறியப்பட்ட 105 தொகுதிகளில் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் செலவின முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் 105 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாநில அளவில் 4 மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகள் - அதில் 2 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், 1 காவல்துறை தேர்தல் பார்வையாளர் மற்றும் 1 பொதுவான தேர்தல் பார்வையாளர் உட்பட நியமனம் செய்யப்பட்டு தேர்தல் செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்க பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்களையும், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள 1800 4252 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலும்  தெரிவிக்கலாம்.

தேர்தல் தொடர்பாக ஏதேனும் தவறான செய்கையில் அல்லது விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டால் cVIGIL என்ற அலைபேசி செயலியின் வாயிலாக தேர்தல் ஆணையத்திற்கு புகாரளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>