×

பாஜ.வுக்கு அல்வா கொடுத்த ரங்கசாமி

புதுச்சேரியில்  தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டுள்ள ரங்கசாமி, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காத பாஜ தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதை, மறைமுகமாக பிரசாரத்தில் காட்டி விட்டார். தனது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில்  மட்டுமே அவர் பிரசாரம் செய்தார். காரைக்கால் பிராந்தியத்தில் 2  தொகுதிகளில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களை இருதினங்களுக்கு முன் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

அங்கிருந்து பிரசாரத்துக்கு புறப்பட வெளியே வந்த அவரை பாஜ.வினர் மடக்கி,  கட்டாயப்படுத்தி, தங்கள் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும்படி அழைத்துச் சென்றனர். தேரடி  வீதியில் வேண்டா வெறுப்பாக 10 நிமிட பிரசாரம் செய்த ரங்கசாமி, பின்னர் அங்கிருந்து  நகர்ந்தார். நேற்றும் கடைசி நாள் பிரசாரத்தில் சூறாவளியாக செயல்பட்ட அவர், வழக்கம் போல் பாஜ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பக்கம் தலையே காட்டவில்லை. இதனால், பாஜ.வினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.




Tags : Rangasamy ,Alva ,BJP , Rangasamy given by Alva to BJP
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி