×

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் 399 கி.மீ. பயணித்து மக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்: பிரபாகர்ராஜா 322 மணி நேரம் தேர்தல் பிரசாரம்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரபாகர்ராஜா தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த 12ம் தேதி தொடங்கினார். நேற்று வரை அவர் மொத்தம் 23 நாட்கள் வீடு, வீடாக சென்று, 399 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மொத்தம் 322 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக வேட்பாளர்களில் மிகக் குறைந்த வயதுடைய வேட்பாளர் பிரபாகர்ராஜா. 35 வயதானவர். அதாவது இளைஞர்களுக்கு எவ்வாறு திமுக முன்னுரிமை தரும் என்பதற்கு அடையாளமாக, எடுத்துக் காட்டாக இந்த விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்” என்றார்.

Tags : DMK ,Virugambakkam ,Prabhakar Raja , DMK candidate for Virugambakkam constituency 399 km. Traveling and walking to the people and collecting votes: Prabhakar Raja 322 hours election campaign
× RELATED பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு கொலை...