வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நாகை: தொடர் விடுமுறை மற்றும் விழா காலத்தையொட்டி வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த 1ம் தேதி பெரிய வியாழன், 2ம் தேதி புனித வெள்ளி ஆகியவை கொண்டாடப்பட்டது. இன்று (4ம் தேதி) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்துள்ளனர்.

இதனால் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பேராலயம் வரும் பக்தர்கள், வேளாங்கண்ணி கடற்கரையிலும் குவிய தொடங்கினார். கடல்நீரில் இறங்கி ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் கடற்கரையில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வேளாங்கண்ணி வந்து மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நேரத்தில் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Related Stories:

>