×

மீண்டும் ஒரு கருப்பு நாள் : சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் பல மாவட்டங்களில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒடுக்க, சிறப்பு அதிரடிப்படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவர்கள் மீது நக்சலைட்கள் அடிக்கடி திடீர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 23ம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் அவர்கள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்களை வீரமரணம் அடைந்தனர். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் நேற்று நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து சட்டீஸ்கர் மாநில டிஜிபி அஸ்வதி கூறுகையில், ‘‘பீஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள டர்ரம் வனப்பகுதியில் நக்சலைட்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கிருந்த நக்சல்கள் திடீரென நடத்ிய துப்பாக்கிசசூட்டில், 5 வீரர்கள் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தனர். மேலும், சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய நக்சலைட்கள் தப்பி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது,’’  என்றார்.

இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 7 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 21 ஜவான்கள் காணவில்லை என அம்மாநில போலீஸ் தரப்பில் இன்று காலை தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த தாக்குதலில் 15 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 30 ஜவான்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 23 பேர் பிஜப்பூர் மருத்துவமனையிலும் 7 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சுக்மாவில் என்கவுண்டர் நடந்த இடத்தில் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

Tags : ராணுவ வீரர்கள்
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...