×

இந்து கடவுள்கள் போல் வேடமிட்டு தேர்தல் பிரச்சாரம்... மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர் கோவையில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கமல்ஹாசன் கடந்த 1ம் தேதி தெற்கு தொகுதிக்குட்பட்ட ராம்நகரில் உள்ள ராமர் கோயில் அருகே பிரசாரம் செய்தார். அப்போது இந்து கடவுள்களான ராமர், அம்மன் வேடமிட்ட மேடை கலைஞர்கள் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து கோவை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் பழனிகுமார் என்பவர் தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர்.

பிரசாரத்தில் இந்து கடவுள்கள் வேடமிட்டு சிலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். இது இந்து கடவுள்களை அவமதிப்பதோடு தேர்தல் நடத்தை விதிமீறலாகும். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் (1951) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராதாரவி மீது வழக்கு: கோவை தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கடந்த மாதம் 23ம் தேதி கோவையில் நடிகர் ராதாரவி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து ஒருமையில் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது தொடர்பாக கோவை தெற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடிகர் ராதாரவி மீது தேர்தல் நடத்தை விதிமீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
----------------

Tags : People's Justice Center ,Kamal Haasan , People's Justice Center, Chairman, Kamalhasan, Prosecution
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...