×

கடைசி நாள் பிரச்சாரத்தில் ஒரேமாதிரி களமிறங்கிய 5 முதல்வர் வேட்பாளர்கள்.. தங்களின் சொந்த தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இன்று மாலை 7 மணிக்கு மேல் வீடுவீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 5 முக்கியமான முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதல்முறை.

 இதில் மு . க ஸ்டாலின் திமுக சார்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பிரச்சாரம் இவர்கள் எல்லோரும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தங்கள் கூட்டணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர் .

இந்த நிலையில் இன்று இறுதி நாள் பிரச்சாரத்தை முதலமைச்சர் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் நிறைவு செய்கின்றனர். எல்லோரும் ஒரே மாதிரியாக தங்களின் சொந்த தொகுதியில் இன்று கடைசி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இன்று மாலை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல் கோவை தெற்கில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்கள்



Tags : CM candidates, ballot collection
× RELATED கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது: ரூ.81,000 பறிமுதல்