×

கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரு நாள் பாதிப்பில் இந்தியா உலகிலேயே முதலிடம், பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.57 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.13 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.27 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,300-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 92,998 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 12,484,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 514 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 164,655 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 65,200 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,382,172 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 793 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 568,499 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 41,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : India ,Brazil , Corona, virus, infection, world, people
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!