×

திமுகவுக்கு வாக்களிப்போம் அமமுகவுக்கு அதிர்ச்சி தந்த தேமுதிகவினர்

இந்த தேர்தலில் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. ஓட்டு வங்கி குறைந்ததால்தான், இந்த முறை அதிக தொகுதியை அதிமுக தரவில்லை. ஓட்டு வங்கியை நிரூபித்தால் அடுத்த தேர்தல்களில் அதிக தொகுதிகளை பெற முடியும் என தேமுதிக தலைமை முடிவு செய்து அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர், தேமுதிக தொண்டர்களை கண்டு கொள்ளாமல் உள்ளதால், வெறுத்துப் போன அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடாமல் உள்ளனர். இதையறிந்த சில அமமுகவினர் தேமுதிக தொண்டர்களை கவனிக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், தேமுதிகவினரோ, எங்களை கழட்டிவிட்டு பிரசாரத்திற்கு சென்று வந்தனர். தற்போது, வந்து கைகோர்க்க பார்க்கிறார்கள், நாங்கள் தேர்தல் பணி ஆற்றவில்லை என்றாலும் திமுகவிற்கு மறைமுகமாக வாக்காளிப்போம் என்கின்றனர். இதனால் அமமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


Tags : DMK , We will vote for DMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி