×

புதுவை தேஜ கூட்டணியில் உரசல் தேர்தலில் பாஜ, அதிமுகவை ஓரங்கட்டும் ரங்கசாமி

புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக இணைந்து போட்டியிடுகிறது. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பாஜ தயக்கம் காட்டி வருகிறது. தேஜ கூட்டணியின் மாநில தலைவர் என்பதை மட்டும் பாஜ தேசிய தலைமை அறிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அறிவிப்பார் என ரங்கசாமி எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மாறாக என்ஆர் காங்கிரஸ் தொழிலதிபர் புவனேஸ்வரன் உள்ளிட்ட ரங்கசாமிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தது. இது ரங்கசாமிக்கு பாஜக மீது கோபத்தை அதிகப்படுத்தி இருப்பதாக என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பிறகும் தாங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதற்கான முன் எச்சரிக்கையாகத்தான் பாஜக திரைமறையில் வருமான வரித்துறை போர்வையில் ஒரு மிரட்டலை முன்னெடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருதுகின்றனர். இதனிடையே புதுச்சேரி வருகை புரிந்த அமித்ஷா, இப்பிரச்னை தொடர்பாக வாய்திறக்கவில்லை. இதுபோன்ற செயல்பாடுகளால் அதிருப்தியின் உச்சத்திற்கு  சென்ற ரங்கசாமி, பாஜக வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த முடிவை அடியோடு ரத்து செய்துள்ளார். இதேபோல் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கும் ரங்கசாமி இதுவரை பிரசாரத்துக்கு போகவில்லை.
இதனால் புதுச்சேரி மாநில தேஜ கூட்டணியில் உரசல் ஏற்பட்டு குழப்பமான சூழல் நீடிக்கிறது. இதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால் அதிமுக, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Rangasamy ,BJP ,AIADMK , Rangasamy to sideline BJP and AIADMK in friction election in Puthuvai Teja alliance
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...