ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவையில் பக்தர்களுக்கு தடை: கொரோனா பாதிப்பால் முடிவு

திருமலை: ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  வருகிற 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு முதல் சுப்ரபாதம், அர்ச்னை, தோல்மாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவை  டிக்கெட் வழங்கி பக்தர்களை அனுமதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், பங்கேற்கும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பக்தர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழ் வருடப்பிறப்பு முதல் பக்தர்களை ஆர்ஜித சேவையில் அனுமதிக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த பிறகு மீண்டும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>