×

வந்தாச்சி ஐபிஎல்....

* பெங்களூர் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமான  படிக்கல் 473 ரன் குவித்து (5 அரைசதம்), அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  நடப்பு தொடரிலும் படிக்கல் முன்வரிசையில் களமிறங்குவார் என்று ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் சைமன் கேட்டிச் கூறியுள்ளார்.
* சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர்  நேற்று முன்தினம் சென்னை வந்தார். தனிமைப்படுத்தலில் உள்ள அவர் நேற்று ரசிகர்களுக்கு சமூக ஊடகமொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘சென்னை வந்துவிட்டேன். ஒரு பிரச்னை. இந்த 6, 7 நாட்களை தனிமையில் எப்படி கழிப்பது என்ற யோசனைகள் தேவை. ஜாலியான, வேடிக்கையான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார்.
* டெல்லி அணி கடந்த சீசனில் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறியதால்  இந்த சீசனில் கவனிக்கதக்க அணியாக மாறியுள்ளது. ஆஸி, இங்கிலாந்து தொடர்களில் களக்கிய பன்ட் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அஷ்வின், ரகானே, தவான், இஷாந்த் போன்ற அனுபவ வீரர்களுடன் ரிஷப், டாம் கரன், ரபாடா, ஹெட்மயர், பிரித்வி... என இளம் வீரர்களும் இணைந்துள்ளது டெல்லி ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
* ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டி மும்பை வாங்கடே அரங்கில் ஏப்.10ம் தேதி நடக்கிறது. இந்தப்போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன. அதுமட்டுமல்ல அங்கு 10 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் வாங்கடே அரங்க ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மைதான ஊழியரான அவரை  உடனடியாக தனிமைப்படுத்தி உள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும் என அணி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.
* சென்னை அணியில் இருந்து ஆஸி. வேகம் ஹேசல்வுட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனை தேர்வு செய்யலாமா என்று அணி நிர்வாகம் யோசித்து வருகிறதாம். அவர்கள் பரிசீலனை பட்டியலில் கப்தில், கான்வே (நியூசி.), ஹேல்ஸ் (இங்கிலாந்து) பெயர்கள் உள்ளதாம்.

Tags : IPL , Vandachchi IPL ....
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா