மயாமி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஹூபர்ட் - சின்னர் மோதல்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் - ஜானிக் சின்னர் (இத்தாலி) மோதுகின்றனர்.அரை இறுதியில் ஸ்பெயின் நட்சத்திரம் பாடிஸ்டா அகுத்துடன் (32 வயது, 12வது ரேங்க்) மோதிய இளம் வீரர் ஜானிக் சின்னர் (19 வயது, 31வது ரேங்க்) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவுடன் (23 வயது, 8வது ரேங்க்) மோதிய ஹூபர்ட் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரின் பைனலுக்கு ஹூபர்ட் முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மயாமி ஓபனில் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஹூபர்ட் - சின்னர் மோதுகின்றனர்.

Related Stories:

>