கனிமொழி எம்பிக்கு கொரோனா

சென்னை: கனிமொழி எம்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் நேற்று காலை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories:

>