×

இடைவிடாத பிரசாரத்துக்கு மத்தியில் இளைஞர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

* சரமாரியான கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளிக்கிறார்
* சன் டிவியில் இன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

சென்னை: இடைவிடாத பிரசாரத்துக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அவர்களின் சரமாரியான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். இந்த நிகழ்ச்சி சன் டிவியில் இன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை ெதாகுதிக்கான தேர்தல் 6ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் முடிகிறது. சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பில் ‘2021-சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டம், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’, ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு, ஒன்றிணைவோம் வா, கிராம சபைக்கூட்டம், மக்கள் கிராமசபை கூட்டம் என்று பல்வேறு வடிவில் தனது பிரசாரத்தை முன்னெடுத்தார்.

அவரின் பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வந்தது. கிராம சபை கூட்டத்தில் அசல் கிராம சபை கூட்டம் நடப்பது போல உட்கார்ந்து மு.க.ஸ்டாலின் மக்கள் குறைகளை கேட்டார். உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்னைகளுக்கு அந்த இடத்திலேயே விடிவு ஏற்படுத்தியும் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் மக்களோடு மக்களாக இருந்தும், மக்களோடு பழகியும் அவர் பிரச்னைகளை கேட்டார். விவசாய மக்களையும் அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று அவர்களின் குறைகளை அவர்கள் வீட்டில் ஒருவர் போல இருந்து கேட்டார். இது மக்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.அது மட்டுமல்லாமல் வீதி வீதியாகவும், தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் மக்களை சந்தித்தும் பேசினார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்தார். காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினால் இரவு 10 மணி வரை இடைவிடாது பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

பிரசாரத்தின் போது நடந்தே சென்று மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மக்களோடு மக்களாக அமர்ந்து சாதாரண மனிதனை போல டீ குடிப்பது. டீக்குடிக்க வந்தவர்களிடம் நலம் விசாரிப்பது என்று அன்புடன் அவர்களை விசாரித்தார். அது மட்டுமல்லாமல் நடந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட போது இளநீர் விற்பவர், பூ விற்பவர், கட்டிட வேலை செய்பவர்கள், துப்புரவு பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசினார். அவர்களுடன் சர்வசாதாரணமாக கைக்குலுக்கியும் கொண்டார். அவர்கள் எந்த நிலையில் இருந்தால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களுடன் சகஜமாக கைக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல் ஆர்வமிகுதியால் பலர் அவருடன் நின்று செல்பி எடுத்து கொண்டனர். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களுடன் நின்று மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்டார். பலர் இவ்வளவு பெரிய தலைவர், ‘‘சாதாரண மனிதனை போல நம்மிடம் பழகுகிறாரே. நம்மிடம் அமர்ந்து சாப்பிடுகிறாரே, இப்படிப்பட்டவர் தான் முதல்வராக வர வேண்டும்” என்று, உணர்ச்சி பொங்க தங்களது ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பஸ்டிரைவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளையும் விலாவாரியாக கேட்டு கொண்டார். இந்த பிரச்னைகள் எல்லாம் திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அது மட்டுமல்லாமல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரத்தின் போது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் அனைத்திற்கும் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்ப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் சூறாவளி பிரசாரத்தை பார்த்து ஆளுங்கட்சியினரே பயந்து போய் உள்ளனர்.அந்த அளவுக்கு மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் மக்களை கவரும் வகையிலும், மக்கள் விரும்பும் வகையிலும் இருந்தது. இதனை அவர் பங்கேற்ற ெபாதுக்கூட்டம், பிரசாரத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களே சாட்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்கள் தானாக முன்வந்து மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலையில் பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு அவர் எப்படி தூங்குகிறார்.

எப்படி குடும்பத்தினரை பார்க்கிறார் என்பதே ஒரு புரியாத புதிராக அவரது சுற்றுப்பயணம் இருந்தது. இவ்வளவுக்கு பிஸியான நேரத்திலும் சன் டிவி ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சுவாரசியமாகவும், சளைக்காமலும், பதில் அளித்துள்ளார். என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு விரிவான விளக்கங்களையும் அளித்துள்ளார். குறிப்பாக தலைவர் கலைஞர் இல்லாமல் தேர்தலை திமுக சந்திக்கிறது இதனை எப்படி உணருகிறீர்கள். உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்ன? உங்கள் அப்பாவை மிஸ் பண்றீங்களா?. சமூக வலைத்தளங்களில் எல்லா தலைவர்கள் பற்றியும் மீம்ஸ் வருகிறது.

உங்களை பற்றியும் மீம்ஸ் வருகிறது. நீங்கள் அதனை பார்ப்பீங்களா?. என்று பல்வேறு விதமான இளைஞர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ‘‘ஸ்டாலின் செய்வாரா?” என்ற சிறப்பு நிகழ்ச்சி இன்று(ஞாயிறு) காலை 11.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சியின் சிறிய தொகுப்பு  வெளியானது. அவரின் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது. மு.க.ஸ்டாலின் என்ன பேச போகிறார், எதிர்காலம் திட்டம் என்ன? என்பதை காண மக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வருகின்றனர்.

Tags : MK Stalin , In the midst of relentless propaganda MK Stalin's discussion with the youth
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...