×

கோயில் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: கோயில்களின் வீட்டு மனை வாடகைதாரர்கள் சங்க தலைவர் ேலாகநாதன், பொதுச்ெசயலாளர் மணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் நிலங்களில் குடியிருப்போர் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.திமுக ஆட்சி காலமான கடந்த 2007ல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 33 சதவீதம் உயர்த்தப்பட்ட வாடகையை 15 சதவீதம் குறைக்கப்பட்டன. கடந்த 2001 முதல் 2007 ஜூன் வரை பழைய வாடகையை வசூலிக்கவும், அதன்பின் 1.7.2007ல் இருந்து உயர்த்தப்பட்ட புதிய வாடகையை வாடகைதாரர்களுக்கு அறிவித்து அவர்தம் ஒப்புலை பெற்று வசூலிக்கலாம் என்று கலைஞர் அரசாணை வெளியிட்டார். தமிழக அரசு பதிவு சட்டம் 22 அரசாணையின்படி 25.7.2007ன் மூலம் மாற்றி அடிமனை நீங்கலாக மேற்கூரையை, தடையில்லா சான்றிதழ் இன்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கலைஞர் ஆணை பிறப்பித்தார்.

ஆனால், ஜெயலலிதா 2016ல் ஒரு சட்டம் போட்டு மேற்படி 22ஏவை செல்லுபடியாகா வண்ணம் செய்தார். 2004ல் கோயில் வீட்டை தானமாக கொடுக்க வேண்டியும், 10 மாத வாடகை நன்கொடையாகவும், 10 மாத வாடகை முன்பணமாகவும் கொடுக்க வேண்டியும் கேட்டு, இவை அனைத்தும் ஒப்புக் கொண்டவர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் செய்து தருவோம் என்று மிரட்டினார். ஆகவே கடந்த காலங்களில் கோயில் மனையில் குடியிருப்போருக்கு பயன் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த திமுகவுக்கு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Temple Housing Tenants Association ,DMK Alliance , Temple House Tenants Association Support for the DMK alliance
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்