காமாட்சி அம்மன் கோயிலில் சசிகலா தரிசனம்

சென்னை:  காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று மாலை சசிகலா தரிசனம் செய்ய வந்தார் அங்கு அவருக்கு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த சசிகலாவை, அமமுக வேட்பாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து, காஞ்சிபுரம் சங்கர மடம் சென்ற சசிகலா, அங்கு மஹாஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் காவி நிற வஸ்திரங்களை சுவாமிகளுக்கு கொடுத்தார். நவலட்சுமிகள் அடங்கிய வெள்ளி பலகையை சசிகலாவுக்கு வழங்கிய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அலுவலக அறையில் ஆசி வழங்கினார்.

Related Stories:

>