×

3 சின்னம்-3 முகங்களில் பாஜக போட்டியிடுகிறது: திருமாவளவன் தாக்கு

அரியலூர்: அரியலூர்  அண்ணாசிலை அருகே திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக  வேட்பாளர்  சின்னப்பாவை ஆதரித்து வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:பாஜக  மற்றும் பாமகவுடன் இணைந்து சந்தர்ப்பவாத கூட்டணியை அதிமுக  அமைத்திருக்கிறது. அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.  பாஜகவினர் போட்டியிடும் 20 தொகுதிகளில் மட்டுமல்ல, அதிமுக, பாமக கூட்டணி  உட்பட, அந்த கட்சிகள் போட்டியிடும் ஓர் இடத்தில் கூட வெற்றி  பெறக்கூடாது. வெற்றி பெறும் உறுப்பினர் அதிமுக உறுப்பினராக இருக்க  முடியாது.

பாஜக உறுப்பினராகத்தான் மாறுவார்.தமிழ்நாட்டை  பொறுத்தவரையில் பாஜகவுக்கு 3 சின்னங்கள் உள்ளன. ஒன்று  தாமரை, மற்றொன்று இரட்டை இலை, மூன்றாவது சின்னம் மாம்பழம். பாஜகவுக்கு  தமிழகத்தில் 3 முகங்கள் உள்ளன. ஒன்று சொந்த முகம், அடுத்தது அதிமுகவின் முகம், மூன்றாவது பாமகவின் முகம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய, மாநில  சுயாட்சிகளை மீட்டெடுக்க, இடஒதுக்கீடு தொடர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : BJP , 3 logo-3 faces BJP is contesting: Thirumavalavan attack
× RELATED 4 கட்ட தேர்தலில் பாஜவுக்கு தோல்வி: அகிலேஷ் யாதவ் கணிப்பு