பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை இல்லை அதிமுகவுக்கு சாதகமாக ஆணையம் செயல்படுகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: மதுரை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் வளம் பெருகும். எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்து 7 வருடங்கள் ஆகின்றன.

இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்க, எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லை. ஜிஎஸ்டியால் தமிழகத்தில் தொழில்கள் நாசமாகி விட்டன. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி, அவர்களின் பிரசாரத்தை முடக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது. அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

Related Stories:

>