பாஜ அண்ணாமலையை மிரட்டி பார்க்க முடியாது: எல்.முருகன் சொல்கிறார்

தாராபுரம்: தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.  நேற்று தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான செயல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் முன் பட்டியலிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தாராபுரத்தில் கடந்த 2ம் தேதி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடக்கும் என்றும், அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறி யாரோ ஒரு நபர் என்னிடம் கடிதம் கொடுத்தார்.

 நான் அதை பரிசீலனை செய்துவிட்டு பதில் சொல்வதாக கூறினேன். ஆனால் அதற்குள் விவசாயிகளின் கூட்டத்தை புறக்கணித்ததாக பொய்யான தகவல்களை பரப்பி உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை இளம் வயதுக்காரர். மெத்தப் படித்தவர். அதனால் அவரை மிரட்டி பார்க்க முடியாது என்றார்.

Related Stories:

>