×

மக்கள் நல பணிகளுக்கு முக்கியத்துவம்: மா.சுப்பிரமணியன் பிரசாரம்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, அவர் பேசியதாவது: நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் சிறந்த முறையில் சீர்திருத்தங்களை செய்ததற்காக கிரிசில் விருது, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியமைக்காக தேசிய விருது, இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றியதற்கு ஸ்காச் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளேன். மழைக்காலத்தில் மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளில் ஒரே நாளில் 155 மருத்துவமுகாம்கள் நடத்தி 60,478 நபர்கள் பயன்பெற்றமைக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை மாநகராட்சி முதல் முறையாக இடம் பெற்றது.

சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரவு காப்பகங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்களுடன் முடநீக்கு பயிற்சி மையத்திற்கு செல்ல இலவச பேருந்து பயண அட்டை, மக்கள் தங்களது குறைகளை உடனுக்குடன் தெரிவித்து தீர்வுகாண மக்களை தேடி மாநகராட்சி என்ற சிறப்பு திட்டம், மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்பட்ட மழலைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், சென்னையில் உள்ள வணிக வளாகங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க நடவடிக்கை என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினேன். சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், தனது சம்பளத்தில் இருந்தும் ஏராளமான நலப்பணிகளை செய்துள்ளேன்.’ என்றார்.

Tags : Subramaniam , Emphasis on Public Welfare: Ma Subramaniam Campaign
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்