சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தெரு தெருவாக ஆட்டோ மற்றும் நடந்து சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மலர் தூவி, பொன்னாடை போற்றி, அவரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திமுகவுக்கு தான் எங்கள் வாக்கு, நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உறுதியளித்தனர். அதை தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துகூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி கூறினார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று, திமுகவிற்க்கு தான் எங்கள் வாக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியளித்தனர்.

Related Stories:

>