பாத்திமா தேவாலய பாதிரியாரை சந்தித்து டி.கே.எம்.சின்னையா வாழ்த்து பெற்றார்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரசாரத்தில், அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளையும், அமைச்சராக இருந்து செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, கிழக்கு தாம்பரத்தில் பழமைவாய்ந்த பாத்திமா தேவாலயத்திற்கு டி.கே.எ.ம்.சின்னையா சென்றார். அவரை பாதிரியார் ஜான் கூரியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்றார்.

அப்போது டி.கே.எம்.சின்னையா, ‘அதிமுக அரசு சிறுபான்மை நலன் காப்பதில் எண்ணற்ற திடங்களை தந்துள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க  எடப்பாடி அரசு உறுதி செய்துள்ளது. ஜெருசலேம் சென்று வருபவர்களுக்கு பல்வேறு சலுகை அளித்துள்ளது. எனவே, தாம்பரத்தில் உள்ள சிறுபான்மையினர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து மேலும் பல நல்லத்திட்டங்களை பெற்றத்தர எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார். இந்த சந்திப்பின் போது முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் எட்வர்ட், ஜார்ஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>