கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதிகளில் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி

நேற்று இருசக்கர வாகனம் மூலம் கொடுங்கையூர் சின்னாண்டி மடம், பார்வதி நகர், கண்ணதாசன் நகர், மணலி சாலை, வியாசர்பாடி பி.வி.காலனி, சர்மா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் நிறைய உள்ளன. நான் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்துள்ளனர்.

அந்த மனுக்கள் மீது, நான் வெற்றி பெற்றதும் 100 நாட்களுக்குள் துரித நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னை, காற்று மாசுபடுதல் பிரச்னை, சாலைகள் ஆக்கிரமிப்பு, நெரிசல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின் போது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனருந்தனர்.

Related Stories:

More
>